மதுரை :
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் அணிந்து உள்ளனரா, உடல் வெப்பநிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு பிறகு, கைகளில் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் திறப்பு
100% மாணவrகளுடன் பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போலவே தற்போது வகுப்புகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
முதல்வர் உத்தரவு
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ஆய்வு
இதனையடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உறுதிமொழி அளித்த அமைச்சர்
வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறை வசதி, கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு எப்போதும் செய்யும் எனவும் உறுதிமொழி அளித்தார்.
+ There are no comments
Add yours