வேலூர். நவ,25 –

வேலூர் மாவட்ட எஸ்.பி.செல்வக்குமார் பணிநிமித்தமாக தனது காரில் சாலையில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் 3 பேர் கத்தியை காட்டி வழிப்பறி செய்துகொண்டு இருந்தனர்.எஸ்.பி.யை பார்த்து அந்த 3 குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.
பிறகு தனது காரில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் மடக்கிபிடித்து குற்றவாளிகளை வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த 3 குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *