கோவை:

கோவை மாவட்டம் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானகடையில் பணியாற்றி வருபவர் 32 வயதான சிவக்குமார், இவர் நேற்று பணியில் இருந்த பொழுது, டாஸ்மாக் மதுபான கடை அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார், உடனடியாக சிவக்குமார் அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரித்ததில், அவர் சேலத்தை பூர்வீகமாக கொண்ட 40 வயதான ஜெயராஜ் என்பதும், அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு சேலம் செல்ல கோவை திரும்பியதும், விரதமிருந்து மது அருந்தாமல் இருந்து விட்டு, மலைக்கு சென்று விட்டு மீண்டும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார் என்பதும் தெரியவந்தது, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்துள்ளார், இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *