கோவை:
கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான நிஷாந்த் இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த நிஷாந்த் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகின்றார், இந்த நிலையில், வேலை விஷயமாக தான் பெங்களூருக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூறி சென்றுள்ளார்.
ஆனால் நிஷாந்த் பெங்களூருக்கு செல்லாமல் தனது கள்ளக்காதலியுடன் கோவையில் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று மதியம் நிஷாந்தின் சகோதரி செல்போனுக்கு அழைத்த நபர் ஒருவர் நிஷாந்த் கோவையில் தான் தங்கியுள்ளார் அவர் தங்கியுள்ள வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருப்ப தாக கூறியுள்ளார், இதையடுத்து நிஷாந்தின் சகோதரி நிஷாந்த் தங்கியிருந்த வீட்ற்க்கு வந்து பார்த்து வெகு நேரமாக கதவை தட்டியுள்ளார், ஆனால் கதவு திறக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார், அப்போது நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டுருந்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து பீளமேடு போலீசாருக்கு நிஷாந்தின் சகோதரி தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours