கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மருமகள் கொலை கொடூர மாமியாருக்கு ஆயுள் தண்டனை

Estimated read time 0 min read

சென்னை:

குடும்ப தகராறில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொலை செய்த வழக்கில் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகின்(25). ஷாகினுக்கும் அவரது மாமியார் தாஜ் நிஷாவுக்கும் குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014 நவம்பர் 26ம் தேதி ஷாகினுக்கும் அவரது மாமியாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷாகின் தூங்க சென்றுள்ளார். அப்போது, அவர் மீது மாமியார் தாஜ் நிஷா கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவர் தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் தாஜ் நிஷா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஷாகினிடம் மருத்துவமனையில் மரணவாக்குமூலம் வாங்கப்பட்டது. இந்நிலையில், சிசிச்சை பலனளிக்காமல் 2014 டிசம்பர் 17ம் தேதி அவர் இறந்துள்ளார்.தாஜ் நிஷாவை கைது செய்த போலீசார் அவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கு வழக்கு சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எம்.முகமது பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours