விலை உயர்வு கட்டாயம், கைவிரித்த ஏர்டெல், ஜியோ, Vi.

Estimated read time 1 min read

இந்தியா:

இந்தியாவைப் போல் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இண்டர்நெட் டேட்டா மிகவும் குறைவான விலைக்குக் கிடைத்த காரணத்தால் பல டெக் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவைகள் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களைப் பெற்று ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.

இதனால் மக்களும் அதிகளவில் இண்டர்நெட்-லேயே இருந்தனர். ஆனால் இனி வரும் காலத்தில் இதுபோன்று நடக்காது 2021 உடன் மொத்தமும் முடிந்தது என டெலிகாம் நிறுவனங்கள் கிட்டதட்ட அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது

டெலிகாம் சந்தை

இந்திய டெலிகாம் சந்தையில் கெட்ட நேரமா, நல்ல நேரமா என்பது விளங்காத நிலையில், இத்துறையில் இருக்கும் அரசு நிறுவனத்தின் சேவை தரம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஜியோ வருவதற்கு முன்பு 10க்கும் அதிகமான டெலிகாம் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா என 3 டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளது.

போட்டி

வர்த்தகப் போட்டியின் காரணமாகவே டெலிகாம் நிறுவனங்கள் மிகவும் குறைவான கட்டணத்திற்குச் சேவை அளித்து வந்தது, இதனால் டெலிகாம் நிறுவனங்கள் நிதிநெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது

20 முதல் 25 சதவீதம் உயர்வு

இந்த நிலையில் கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் டெலிகாம் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

5ஜி சேவை

இது மட்டும் அல்லாமல் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் துவக்க திட்டம் அதாவது பேசிக் திட்டத்தின் விலையைக் கூட அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்குத் தயாராகி வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

5ஜி சேவை வந்தால் என்ன இருக்கு எனக் கேட்பவர்கள் அனைவருக்கும் முக்கியத் தகவல். 4ஜி அலைகற்றைச் சேவைக்கே அதிகளவிலான போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டது, இதனால் பல டெலிகாம் நிறுவனங்கள் கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ளது.

விலை உயர்வு கட்டாயம்

இந்நிலையல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டால் இதற்கும் அதிகப்படியான போட்டி ஸ்பெக்டரம் ஏலத்தில் இருக்கும். இந்த நிலையில் அதிகப்படியான விலையில் 5ஜி சேவை அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் கடன் சுமையைக் குறைப்பதற்காகப் பிற கட்டண சேவைகளின் விலையைக் கட்டாயம் உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.

மீண்டும் கட்டண உயர்வு

இந்தச் சூழ்நிலையில் மலிவான விலையில் இண்டர்நெட் டேட்டா சேவையை இந்திய டெலிகாம் நிறுவனங்களால் வழங்குவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. இதனால் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வர்த்தகம் அடுத்தச் சில மாதங்களில் தொடர்ந்து பாதிப்பை எதிர்கொள்ளும். மேலும் டெலிகாம் நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் மீண்டும் ஒரு கட்டண உயர்வை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours