சீனாவின் சோங்கிங் பகுதியில் `ஸ்டார்லைட் ப்ளேஸ்” ஷாப்பிங் சென்டர் இருக்கிறது. இந்த ஷாப்பிங் சென்டரில் ஒருவர் தன் நண்பர்களுடன் 6,00,000 யுவான் (ரூ.70 லட்சத்திற்கு மேல்) ரொக்கமாகப் பணம் செலுத்தி, பொருள்களை வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை கடை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரமாக எண்ணி முடித்திருக்கிறார்கள். அவர்கள் முழு பணத்தையும் எண்ணி முடித்ததும், அந்தப் பெண், பொருள்வாங்கும் எண்ணம் மாறிவிட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை திரும்பப் பெற்றிருக்கிறார். இது அந்தக் கடைக்காரர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அந்தப் பெண், சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார். அதில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்தக் கடைக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அந்தக் கடையில் இருந்த ஊழியர்கள் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை. தண்ணீர் கேட்டதற்குக்கூட தராமல், காலாவதியான பொருள்களைக் காண்பித்து அவமரியாதையாக நடந்து கொண்டார்கள். இது தொடர்பாக மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
+ There are no comments
Add yours