சேலம் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த லிங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் அதிக அளவில் கமிஷன் வாங்குவதாகவும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியினை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுவைச் சேர்ந்த 8 திமுக கவுன்சிலர்கள், 2 தேமுதிக கவுன்சிலர்கள், ஒரு பாமக கவுன்சிலர் என 11 கவுன்சிலர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
+ There are no comments
Add yours