சேலம்;
சேலம் மாவட்டத்தில் கிரவல் மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல் சூளைக்கு தேவையான செம்மண் கிடைப்பதிலும்; மண்பாண்டம் செய்ய தேவையான களிமண் கிடைப்பதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த செங்கலின் விலை தற்போது 9.50 ரூபாய்க்கும்; 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 4 யூனிட் மண், தற்போது 7 ஆயிரத்து 500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள், டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேலை இன்றி வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தங்களின் அவல நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் சேலம் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
+ There are no comments
Add yours