சேலம்;
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள அய்யனார் கோவில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவர் பஞ்சுமெத்தை தயாரிக்கும் ஆலை கடந்த மூன்று மாதங்களாக நடத்தி வருகிறார்
இந்த நிலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது உடனடியாக உள்ளே இருந்த ஊழியர்கள் பதறி அடித்து வெளியே ஓடினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு உடனே சுற்றி நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி தீயை போராடி அணைத்தனர் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாத்திர குடோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்களிலும் பரவியது சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீவிபத்தில் இயந்திரம் மற்றும் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் முழுவதும் தீயில் கருகி நாசம் ஆயின இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என காவலர்கள் தகவல் தெரிவித்தனர் இந்த தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது பஞ்சி பிரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்திலிருந்து ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடியதால் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். தீ விபத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது…
+ There are no comments
Add yours