கோடானு கோடி! டீக்கடை பன்னீருக்கு வந்தது எப்படி? தர்மயுத்த நாயகனுக்கு விழுந்த ஆப்பு!

Estimated read time 1 min read

கோடானு கோடி!
டீக்கடை பன்னீருக்கு வந்தது எப்படி?
தர்மயுத்த நாயகனுக்கு விழுந்த ஆப்பு!

 

சென்னை,நவ 26 :

பெரியகுளத்தில் டீக்கடை நடத்திக்கொண்டு இருந்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் டி.டி.வி.தினகரனின் தொடர்பால், மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு சென்ற போதெல்லாம் முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் மீது, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த அமுலாக்கத்துறை ரெய்டில், சேகர் ரெட்டியுடனான தொடர்பில் பணபரிவத்தனை கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 2016 – 2017 ஆம் நிதியாண்டில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கூறி, முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 82 கோடியே 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை கடந்த 28.09.2021 இல் அனுப்பிய நோட்டீஸ் எண் : DIN ITBA/AST/S/153C/ 2021-2022/1035976843(1) மீது தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு எண் 25194/2021 தாக்கல் செய்து இருந்தார். அதில் 2015- 2016 ஆம் ஆண்டுக்கு 20 இலட்சத்து 971 ரூபாயும், 2017 – 2018 ஆம் ஆண்டுக்கு 82 கோடியே 12 இலட்சத்து 44 ஆயிரத்து 485 ரூபாயும் வருமானவரி நிலுவைத் தொகை செலுத்த உத்தரவிட்டதை இரத்து செய்ய கோரி இருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீது வருமானவரித்துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சத்து 971 ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 485 ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பெரிய குளத்தில் டீக்கடை வைத்து அன்றாட ஜீவனம் நடத்தி வந்த ஓ. பன்னீர்செல்வம் 2015 – 2016 மற்றும் 2017 – 2018 ஆம் நிதியாண்டுகளுக்கு மட்டுமே 82 கோடியே 32 இலட்சம் ரூபாய் வருமானவரி விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், தமிழகத்தின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்பதை உணரலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதையெல்லாம் மறைக்கவே “தர்மயுத்தம்” என்றப்பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெற்றார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், இந்த வழக்கின் மூலம் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவித்ததில், தன் தலைவி ஜெயலலிதாவையும் விஞ்சி விட்டார் என்றும், இதனால் எங்கே பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ என்ற பன்னீர்செல்வம் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

வணக்கம் தமிழ்நாடு
26.11.2021

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours