பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாக புகார் தருவதற்கு முன்வர வேண்டும்; புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் தயங்கக் கூடாது!

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்திகள் என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது.

புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்றோ, தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரோ நினைக்கக் கூடாது.

அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.

பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர அரசு தயங்காது.

பெண் குழந்தைகள் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்; ரகசியம் காத்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் உரிமைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அன்புக் குழந்தைகளே…

உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது; முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது; தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *