PETROL, DIESEL Price Today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.

Estimated read time 1 min read

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, நாள்தோறும் எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 68ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

நகரம் பெட்ரோல் டீசல்
Delhi 95.41 86.67
Mumbai 109.98 94.14
Chennai 101.40 91.43
Kolkata 104.67 89.79
Source: Indian Oil

இந்நிலையில், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி, பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours