♻️ தூத்துக்குடி மாவட்டம் : 06.11.2021
♻️ தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு – 33 பேர் கைது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 246 பேர் கைது – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 809 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.
♻️ மதுரை, தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.T. S. அன்பு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
♻️ மேலும் காணொளி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.
♻️ 04.11.2021ம் தேதி தீபாவளி திருநாளன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 233 வழக்குகள் போடப்பட்டு, 246 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours