மேட்டூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியவர் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்தவர் வினோத்(30). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சாம்பள்ளி மயானம் அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை காலை தகவலறிந்த சேலம் ரயில்வே போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் மதுக்கடை இருப்பதால் பெரும்பாலானவர்கள் இரவு நேரங்களில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
+ There are no comments
Add yours