கோயம்புத்தூர்;
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேகரமாகும் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் அங்கு ஈக்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு ஆகியவை காரணமாக குப்பைக்கிடங்கில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பனிக்காலத்தில் குப்பையில் துர்நாற்றம் வருவது வழக்கம். எனவே அங்கு ஸ்பிரே அடிக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பயோமைனிங் முறையில் பழைய குப்பைகளை அழிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கு
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours