சேலம்;
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 18 பேர், வீரபாண்டியில் 4 பேர், சேலம் ஒன்றியம் பகுதியில் 3 பேர், ஆத்தூர் நகராட்சியில் 2 பேர், காடையாம்பட்டி, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, தலைவாசல் பகுதியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 41 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள்
நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், கொரோனா பாதிப்புக்கு அரசு மற்றும் தனியார்
ஆஸ்பத்திரிகளில் 418 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
+ There are no comments
Add yours