கோவை;
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் நித்யா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் நாகம்மாள்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 59)என்பதும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 500 மற்றும் கள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-Mohamed Bilal
+ There are no comments
Add yours