கோவை;
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள மத்தம்பாளையம் பகுதியில்
பெரியநாயக்கன்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் ரோந்து
பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே கஞ்சா
விற்பதாக அந்த போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் விரைந்து
சென்று சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கல்லூரி அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த
காரமடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் 20 வயதான கிருத்திக் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்த பொழுது கல்லூரி அருகே அவ்வப்போது நின்றுகொண்டு கஞ்சா விற்று கொண்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் அவரிடம் இருந்து 1. 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து
அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-Mohamed Bilal
+ There are no comments
Add yours