கோவை;
ஜாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டுமெனவும் கோவை மாநகரில் போதைப்பொருள்கள் பழக்கத்தை தடுத்திட வேண்டுமெனவும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தெற்கு
வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர், இந்த ஆர்பாட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது எனவும் வயது வந்த பெண்கள்
தனது திருமணத்திற்கான இணையை தேர்வு செய்து கொள்ள சட்டம் அனுமதி அளித்துள்ள போதிலும், அதை ஏற்காமல் சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றது, சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது நீண்டநாள்
கோரிக்கை, அதன் மூலமாக அத்தகைய குற்றங்களை தடுக்கவும்,
அப்படி நடைபெறும் பொழுது வழக்கு பதிவு செய்து துரிதமான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக உடனடியாக நீதி பெற முடியும் எனவும், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும் எனவும், போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக பிணையில் வெளி வரும் சூழல் தமிழகத்தில் உள்ளது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக விசாரணை செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும், கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து இந்த விற்பனை உள்ளது இதனை தடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றதாக தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்டாலின் குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச்செயலாளர் யூகே சிவஞானம், மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் விவேகானந்தன், பாரதி, சந்திரசேகரன், அர்ஜுனன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-Mohamed Bilal
+ There are no comments
Add yours