எட்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் டிஐஜி ஜான் நிக்கல்சன் மனைவி அம்பாசமுத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு டிஐஜியாக இருந்த ஜான் நிக்கல்சன் சென்னை கன்னியாகுமரி விரைவு ரயிலில் தனது கள்ளக்காதலியுடன் வந்ததாகவும் குமரிமாவட்டத்தில் இருவரும் ஒன்றாக காரில் சுற்றிய தாகவும் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்களில் தகவல் பரப்பியதாக கூறி எட்டு நாட்களுக்குப் பின்னர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்ற மதுரை பெஞ்சில் முன்ஜாமீன் கேட்டபோது மிகப்பெரும் இடையூறுக்கு இடையே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் மேற்படி வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் மனு தாக்கல் செய்தும் அம்பை போலீசார் தீவிர எதிர்ப்பு காண்பித்து தள்ளுபடி செய்ய வைத்தனர். மேலும் ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சை அணுகி பெரும் சட்டப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட சென்றபோது போலீசார் கைது செய்ய முயற்சித்ததாகவும் மேலும் ரவுடிகள் தாக்க முயற்சித்ததாகவும் கூறி வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரு சாட்சிகள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் வழக்கு வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாற்றப்பட்டது. வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் பலரும் முன்னுக்குப்பின் முரணாகவும் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் பதி விட்டதாக கூறிய செல்போன் எண்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் எண்கள் அல்ல என்பது நிரூபணமானது. மேலும் காவல்துறையின் விசாரணையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் எண்களை சாட்சிகள் கூற வில்லை என்பதும் அனைத்து சாட்சியங்களும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததாகக் கூறி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் எட்டு வருடங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு ஜான் நிக்கல்சன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours