சென்னை:

ராஜூ செய்த செயலால் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போய் உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் தன் நிலை மாற மாட்டேன் என்று ராஜு கூறியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ராஜுவின் செயல்களைப் பார்த்து நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

காத்து இருந்ததற்கு கிடைத்த வாய்ப்பு

ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதற்கு தற்போது பிரபலங்களுக்கு அதிகமாக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. பல திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்குவதை விடவும் இப்படி ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டாலே தாங்கள் பிரபலம் ஆகி விடலாம் என்று பலர் போட்டி போட்டு வாய்ப்புக்காக ஏங்கி வருகின்றனர். அந்த மாதிரிதான் கடந்த நான்கு சீர்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த ராஜுவுக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும், அவருடைய திறமைக்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ராஜு

சின்னத்திரையில் மூலமாக காமெடி நடிகராக ரசிகர்களை கவர்ந்த ராஜூ தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலமாகவும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார். இவர் என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் இவர் மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் ராஜுவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தான் வெற்றி பெறுவதற்காக தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தாலும் தனக்கென்று இருக்கும் நியாய தர்மங்களை தாண்டி தான் செயல்பட மாட்டேன் என்று அவர் கூறி வருவதை பார்த்து ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவு அதிகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலர் அதுவரைக்கும் பெற்றிருந்த நல்ல பெயர்களை இழந்து போய் விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதற்கு முன்பு இருந்ததை விடவும் பல மடங்கு மக்களிடையே செல்வாக்கு உயர்ந்து விடுகின்றனர். அந்த மாதிரிதான் தற்போதைய சீசனில் ராஜு இருந்து வருகிறார். முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் மலைபோல உயர்ந்து வருகிறார்கள். ரசிகர்களின் ஆதரவினால் ராஜுவின் பெயர் எலிமினேஷனில் வரும்போதெல்லாம் ரசிகர்களின் வாக்குகளின் படி அவர் முதல் ஆளாக சேவ் ஆகிவிடுகிறார்.

ரசிகர்களை கவர்ந்த வார்த்தை

இந்த வார போட்டியாளர்களின் எலிமினேஷனுக்காக நேற்று நடந்த டாஸ்கில் ராஜு நடந்து கொண்டதைப் பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர். சிபி தான் முதலிடத்தை பெறுவதற்காக அடுத்தவர்களை குறை கூறி மட்டம் தட்டிக் கொண்டிருந்ததை பார்த்து நான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்த சூழ்நிலையிலும் இந்தமாதிரி ஒரு செயலை செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார். எனக்கு என்று இருக்கும் திறமையை பார்த்து என்னுடைய ரசிகர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று அவர் கூறியதை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *