இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்திருக்கிறார் சூரி.

இப்படம் வருகிற மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சசிகுமார், வெற்றி மாறன், விஜய் சேதுபதி, வடிவுக்கரசி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், ” நான் பாலு மகேந்திர சார் கிட்ட கடைசி அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்கும்போதுவெற்றி மாறன் அண்ணன் அசோசியேட் டைரக்டராக அவர்கிட்ட இருந்தாரு. சினேகன் பேசும்போது என்னை நேர்ல பார்த்தது இல்லனு சொன்னாரு. நான் ஆடுகளம் படத்துல துணை இயக்குநராக வேலைப் பார்த்தேன். அப்போவே சினேகன் சார்கூடவும் வேலைப் பார்த்துருக்கேன்.

‘கருடன்’

இப்போ மதுரையை மையப்படுத்திய கதைக்களம்னு வந்ததும் சினேகன் மாதிரியான ஆட்கள் சரியாக இருப்பாங்கனு நினைச்சேன். உன்னி முகுந்தன்தான் இந்த படத்துக்கு முதல் பாசிட்டிவிட்டி. ‘Malikappuram‘ படத்துக்குப் பிறகு அவர் பல கதைகள் கேட்டு பண்ணமா இருந்தாரு. இந்த கதை சொன்னதும் அவர் உடனே பண்றதுக்கு ஒத்துக்கிட்டார். படத்துல உன்னி முகுந்தன் சார் புலி மாதிரி.

சசிகுமார் சார் சிங்கம் மாதிரி. இவங்களுக்கு நடுவுல சூரி சார் வேட்டைகாரன். நானும் யுவன் சாரும் இன்ட்ரோவெர்ட். இந்தப் படத்தை அடுத்தக்கட்டதுக்கு எடுத்துட்டு போனது யுவன் சாரோட இசைதான். தோனி சொல்ற மாதிரி நான் படம் பண்ற ப்ராசசை ரொம்பவே லவ் பண்றேன். என்னோட முந்தைய படத்துக்குப் பிறகு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டு புரிஞ்சுக்கிட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” என்றார்.

விஜய் சேதுபதி

இதனைத்தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, ” நானும் சூரியும் சில படங்கள்தான் சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். விடுதலைக்குப் பிறகு கருடன். இதுக்குப் பிறகு கொட்டுக்காளி. அவனுக்கு இயற்கையும் கடவுளும் சேர்ந்து ஆசீர்வதிப்பாங்க” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *