தொலைக்காட்சி சீரியல்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் தெரிந்துக் கொள்வோம்.

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி சந்தியாவின் குழந்தைக்கு மாயா என்று பெயர் சூட்டிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா.. அந்த குழந்தையே நான் தான் என்று சொன்னதும் ஜானகி ஷாக்காகிறாள். நீ தானா அந்த குழந்தை என்று கண் கலங்குகிறாள், அடுத்ததாக மாயா இதையெல்லாம் அம்மா அவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க, என் அக்கா ஜானகி உனக்கு பெரியம்மா இல்ல அவங்க தான் எல்லாமேனு சொன்னாங்க என்று சொல்ல ஜானகி என் தங்கச்சி என்னை பத்தி இவ்வளவு சொல்லி இருக்காளா? என்று கண் கலங்குகிறாள். 

இதனையடுத்து மாயா, சொல்லுங்க பெரியம்மா உங்களுக்கு என்ன சத்தியம் பண்ணனும் என்று கேட்டு கையை நீட்ட ஜானகி எனக்கு நீ எந்த சத்தியமும் பண்ண வேண்டாம் என்று ஜானகி கையை எடுத்து கொள்கிறாள். அடுத்து ரகுராம் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் பூஜையறையில் உட்கார்ந்திருக்க ஜானகி என்னங்க ஆச்சு என்று கேட்கிறார்.

மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

அவர் ஓடி போன பெண்ணின் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறார், நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல என்று கலங்குகிறார். அந்த பொண்ணு ஓடி போனதுமே அவங்க அப்பா செத்து போய்ட்டாங்க என்று சொல்லி கவலைப்படுகிறார்.

இதனை தொடர்ந்து நம்ம வீட்டுலயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கு, இனிமே அது போல் எப்பவும் நடக்க கூடாது என்று சொல்ல ஜானகி தனது கல்யாணத்தை நினைத்து பார்க்கிறாள், சந்தியா கிஷோரை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதும் அவரை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைந்து சந்தியாவை திட்ட என் தங்கச்சியை திட்டாதீங்க என்று சொல்லியதை நினைத்து பார்க்கிறாள். 

அடுத்து ரகுராம் தனது கழுத்தில் தாலி காட்டியதை நினைத்து பார்க்கும் ஜானகி, முதலிரவு அறையில் மாமா சொன்னதால் தான் தாலி காட்டினேன். மற்றபடி உன் மேல எனக்கு எந்தவொரு ஈர்ப்பும் இல்ல, போக போக என்னை மாத்திக்கறேன் என்று சொல்லி முதலிரவை தள்ளி போட்டது நினைவுக்குக் வருகிறது.

பிறகு ஜானகி ஒரு பொறுப்பான மனைவியாக நடந்து கொள்ள தொடங்கியதும் ரகுராம் இந்த குடும்பத்தோட கவுரவம் தான் எனக்கு முக்கியம். அது கெட்டு போகாமல் நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்லியதையெல்லாம் நினைத்து பார்க்கிறாள். இப்படியான நிலையில அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சந்தியா ராகம்: சத்தியம் கேட்ட ஜானகி.. மாயா கொடுத்த அதிர்ச்சிம், நடந்தது என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *