Malaysian Airlines MH270 Flight: கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அன்று மலேசியாவின் தலைநகர் கொலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைனிஸின் MH370 விமானம் நடுவானில் மாயமானது. 2014ஆம் ஆண்டில் இருந்து சுமார் மூன்றாண்டுகளுக்கு இந்திய பெருங்கடலின் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அலசி, ஆராய்ந்தும் விமானம் எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
விமானத்தின் சிறு சிறு பகுதிகள் மட்டும் கிடைக்கப்பெற்றது. அந்த விமானம் என்ன ஆனது என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது. விமானம் குறித்த தகவல் ஏதும் பெரிதா கிடைக்காததை தொடர்ந்து, அதை தேடும் மாபெரும் தேடுதல் பணி நிறுத்தப்படுவதாக 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 239 பேருடன் விண்ணில் பறந்த விமானம் என்ன ஆனது என்பது இந்த தகவல் தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்துவிட்ட காலகட்டத்திலும் கண்டுபிடிக்க முடியாது மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது.
வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட விபத்து
அந்த வகையில், உலகில் உள்ள மூத்த விஞ்ஞானிகள் முதல் பல்வேறு வல்லுநர்களும் அந்த விமானத்தின் குறித்து பல்வேறு விதமான கருத்துகளை முன்வைக்கின்றனர் எனலாம். இருப்பினும் எதையும் அறுதியிட்டு உறுதிப்படுத்த முடியவில்லை எனலாம். அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர் MH370 விமானம் காணாமல் போன மர்மத்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | அழியப்போகும் ஆண்கள்… ஆய்வு முடிவில் காத்திருந்த அதிர்ச்சி!
இதுகுறித்து டாஸ்மேனிய ஆராய்ச்சியாளர் வின்சென்ட் லைன் அவரது LinkedIn பதிவில்,”இந்திய பெருங்கடலில் Broken Ridge என்றழைக்கப்படும் 20 ஆயிரம் அடி ஆழமான துளையில் விமானம் வேண்டுமென்ற விழுந்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி வேண்டுமென்றே இதை செய்திருக்கலாம் என வின்சென்ட் வாதிடுகிறார். விமானம் அதிக வேகத்தில் சென்று இந்திய பெருங்கடலின் 7ஆவது வளைவில் எரிபொருள் தீர்ந்துபோய் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என வாதத்தை இவர் ஏற்க மறுக்கிறார்.
வலது இறக்கை மோதவில்லை
விமானத்தின் வலது இறக்கை கடலில் மோதியிருந்தால் விமானத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்ற வாதத்தை ஏற்கலாம். ஆனால், வலது இறக்கை முதலில் கடலில் மோதவில்லை. இந்த அற்புதமான கண்டுபிடிப்பை Navigation இதழ் அறிவித்திருந்தது. வலது இறக்கை சேதமடையாததன் மூலம் வேண்டுமென்ற விமானம் கடலுக்குள் வீழ்த்தப்பட்டதாக தெரிகிறது.
விமானத்தின் இறக்கைகள் மற்றும் மற்ற பாகங்களில் ஏற்பட்ட சேதங்களை பார்க்கும்போது, 2009ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஓடும் ஹட்சன் ஆற்றில் ஏற்பட்ட விபத்துடன் ஒத்துப்போகிறது. அந்த விபத்தை கேப்டன் செஸ்லி சுல்லி சுல்லன்பெர்கர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார். அதே பாணியில்தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும் வீழ்த்தப்பட்டுள்ளது.
மர்மம் அறிவியலால் தீர்க்கப்படும்
இந்திய பெருங்கடலின் Broken Ridge பகுதியின் கிழக்கு முனையில் மிகவும் ஆழமான 6000 மீட்டர் துளைகள் இருக்கின்றன. குறுகிய மற்றும் செங்குத்து வடிவிலான பக்கங்களுடன் பாரிய முகடுகளால் அது சூழப்பட்டுள்ளது. மற்ற துளைகளும் நன்றாக வண்டல் நிரம்பியவை ஆகும். எனவே அந்த இடத்தில் அதிக முன்னுரிமை கொடுத்து, இதனை சரிபார்க்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி,”இனியும் அந்த விமானத்தை தேடுவார்களா இல்லையா என்பது அதிகாரிகள் மற்றும் தேடுதல் நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் அறிவியலைப் பொறுத்த வரையில், முந்தைய தேடல்கள் ஏன் தோல்வியடைந்தன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதேபோல், MH370 எங்கு உள்ளது என்பதைத் நமது விஞ்ஞானம் தவறாமல் சுட்டிக்காட்டுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், MH370 மர்மம் விரிவானது. அறிவியலில் தீர்க்கப்படவல்லது” என்றார்.
மேலும் படிக்க | 80 வயது தாத்தாவை திருமணம் செய்த 23 வயது பெண்.. இப்படி ஒரு காதல் கதையா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours