Sunita Williams Annual Salary: விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் குறித்த பேச்சுகளை நீங்கள் சமீப காலங்களில் நிறைய கேட்டிருப்பீர்கள். நாசாவில் இருந்து boeing starliner விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு (ISS) சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும், தற்போது விண்வெளி மையத்திலேயே சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூன் 5ஆம் தேதி விண்கலத்தில் புறப்பட்ட இவர்கள் ஜூன் 6ஆம் தேதி இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். சுமார் 8 நாள்கள் விண்வெளி சுற்றுப்பயணமாக இது திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் சென்ற Starliner விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாகவும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர். மேலும், சுனிதா மற்றும் புட்ச் இருவரும் அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் நாசா தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்?
தற்போதைய Starliner விண்கலம் மூலம் அவர்கள் பூமி திரும்புவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில் அவர்கள் எலான் மஸ்கின் SpaceX Crew Dragon விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Spacesuits பிரச்னை இருப்பதால் அவர்கள் Dragon விண்கலத்திற்கு மாறுவது சற்று ஆபத்தானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நாசா தரப்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | பூமி திரும்பும் போயிங் ஸ்டார் லைனர்! சுனிதா வருவாரா?
ஒருவேளை Dragon விண்கலம் மூலமே சுனிதாவும் புட்ச்சும் பூமி திரும்புவார்கள் என்றால், அவர்களுக்கு முன்பாகவே Starliner விண்கலம் பூமிக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது. எனவே, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் எப்போது பூமி திரும்புவார்கள் என்பது குறித்து செப்டம்பர் முதல் வாரத்தில் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அவர்கள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் அங்கு போதுமான அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
மூத்த விண்வெளி வீரர்
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஓராண்டுக்கு எவ்வளவு வருவாயை ஈட்டுகிறார் என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. விண்வெளி வீரர்கள் சமூகத்தில் சுனிதா வில்லியம்ஸிற்கு தனியிடம் உள்ளது. நாசாவின் அனுபவம் வாய்ந்த மூத்த விண்வெளி வீரர்களில் ஒருவராக சுனிதா வில்லியம்ஸ் அறியப்படுகிறார். இது அவரது நான்காவது விண்வெளி பயணமாகும். மொத்தம் 322 நாள்கள் அவர் விண்வெளியில் இருந்துள்ளார். இவர் தனது விண்வெளி பயணத்தின் போது பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா இந்தியாவின் குஜராத் மாநிலத்தன் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்தவர். சுனிதாவின் தாயார் உர்சுலின் போனி ஸ்லோவேனியன் அமெரிக்கர் ஆவார். அந்த வகையில் சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு பாரம்பரியங்களில் இருந்து வந்தவர் எனலாம்.
சுனிதா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு வாங்கும் வருவாய் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நாசாவின் அறிக்கைகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு சம்பளம் சுமார் 152,258 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது வருடத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரத்து 434 ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours