இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோ ஒன்றை துபாயில் அமைந்த்துள்ளார்.
உலகின் விலையுயர்ந்த இசைக் கருவிகள், ரெக்கார்டர்கள், மிக்ஸர்கள், தேவைக்கேற்றவாறு அறையின் உயரத்தையும், அகலத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுமளவிற்கு அதிநவீன வசதிகள் அனைத்தும் அங்கிருக்கின்றன. அதன் பெயர் ‘Firdaus Studio’.
ஆரம்ப காலங்களில் சின்ன ஏசி அறையில் மிக்ஸ்ர்களை வைத்துக் கொண்டு ஸ்கோரிங், ரெக்கார்டிங் செய்வதற்குக் கூட எதையும் வாங்க முடியாமல் எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்த ரஹ்மான், இன்று உலகின் மிகப்பெரிய, அதிநவீன ஸ்டுடியோவில் தனது இசை மூலம் எல்லோரின் ஆன்மாக்களை வருடிக் கொண்டிருக்கிறார். நம் நாட்டின் இசையை உலக அரங்கில் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த இசைப் பயணம் பற்றிய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வாழ்க்கையை மாற்றிய தருணம் பற்றிய நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார். அப்போது, “நான் முதன்முதலில் ஸ்டூடியோ அமைத்தபோது என்னிடம் சுத்தமாகப் பணமில்லை. ஸ்டூடியோவிற்காக அம்ப்லிஃபையர், ஈக்குவலைசர் போன்ற அடிப்படையான கருவிகள் வாங்குவதற்குக் கூட அப்போது என்னால் முடியவில்லை.
ஏசி, செல்ஃப், ரெட்கார்பெட் மட்டும் ஸ்டூடியோவில் இருக்கும். வேறு எதுவும் இல்லாமல், எதையும் வாங்க பணமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பேன். என் அம்மாவின் நகையை அடகு வைத்துதான் முதன்முதலில் ரெக்கார்டர் ஒன்றை ஸ்டியோவிற்காக வாங்கினேன். அந்தத் தருணம்தான் என் வாழ்க்கையே மாற்றியத் தருணம். என் எதிர்காலத்தை நான் உணர்ந்த தருணம்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours