Top Cooku Dupe Cooku Vadivelu Slary: அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி போன்று தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார். அதன்படி இவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் காணபோம்.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்று தனியார் தொலைக்காட்சியில் தொடங்கப் போகும் நிகழ்ச்சியின் பெயர் டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சியில் நடிவாராக வெங்கடேஷ் பட் உள்ள நிலையில், தற்போது இவருடன் நடிகர் வடிவேலும் கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோ வைரலானது.
மேலும் படிக்க | Good Bad Ugly First look : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மிரட்டல் லுக் வெளியீடு
டாப் குக்கு டூப் குக்கு ஒளிப்பரப்பு நேரம்:
இந்த நிகழ்ச்சியானது கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு முதல் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டாப் குக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியாளர்களின் விவரம்:
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவகுமார், சிங்கம்புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலிநிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி ஆகிய 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டூப் குக்குகளின் விவரம்:
மறுபுறம் டூப் குக்காக தீபா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய், முகுந்த், சௌந்தர்யா, கதிர் ஆகிய 9 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்துவதற்காக மூன்று செஃப் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
டைட்டில் வின்னருக்கு என்ன கிடைக்கும்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் போட்டியாளருக்கு 20 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிகழ்ச்சியில் வடிவேலு:
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு வந்திருக்கிறார். அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறாரா? அல்லது நடுவராக தொடர போகிறாரா? என்பது பிறகு தான் தெரியவரும்.
வாயை பிளக்க வைக்கும் வடிவேலுவின் சம்பளம்:
இந்நிலையில் தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு பங்கேற்று உள்ளார். மேலும் இதில் ஒரு எபிசோடுக்கு அவர் ரூ. 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு எபிசோடுக்கே இவ்வளவு சம்பளமா என்று ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
புது நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட்:
தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘டாப் குக் டூப்பு குக்’ என்ற காமெடி சமையல் நிகழ்ச்சி ஆகும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலவே இருந்தாலும், இதில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு இந்த நிகழ்ச்சிக்கும் கிடைக்குமா? இல்லையா? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours