இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் மகள் லாரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் லாரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours