“மங்கா’ (Manga) காமிக்ஸில் கிராபிக் நாவலாக முதன் முதலில் வெளியானது ‘ஒன் பீஸ்’ (One Piece). நாளடைவில் அது அனிமி தொடராகவும் வெளிவந்தது. 1000-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இது ஜப்பானில் அதிகப்படியான வரவேற்பையும் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஒன் பீஸ்’ தற்போது லைவ் ஆக்ஷன் வெப் சீரிஸாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
கடற்கொள்ளையர்களில் சிறந்து விளங்கும் கோல்டு ரோஜர் அரசாங்கத்தால் தண்டனைக்கு உட்பட்டுக் கொல்லப்படுகிறார். அவர் இறப்பதற்கு முன் தான் கொள்ளையடித்த பொருள்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுகிறார். அதுதான் ‘ஒன் பீஸ்’. அந்த ஒன் பீஸைத் தேடிப் பல கடற்கொள்ளையர்கள் புறப்படுகிறார்கள். அதில் ஒருவன்தான் மங்கி டி லூஃபி.
சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெரிய கடற்கொள்ளையனாக வேண்டும் என ஆசைப்பட்டவன், தன் பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தில் தனக்கென ஒரு குழுவையும் சேர்த்துக் கொள்கிறான் லூஃபி. அக்குழுவின் பெயர் ‘ஸ்ட்ரா ஹேட் பைரேட்ஸ்’ (Straw Hat Pirates). இவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள்தான் இந்த ஃபேன்டஸி வெப் சீரிஸின் கதைக்களம்.
+ There are no comments
Add yours