அவ்ளோ பெரிய கூட்டத்தை நம்ம பாட்டு  மூலமா சந்தோஷப்படுத்தப் போறோம்னு எங்களுக்கு உற்சாகமா இருந்தது. சீக்கிரம் முடிக்க சொல்லிட்டாங்களே என்கிற ஒரே ஒரு வருத்தம் தான் இருந்துச்சு. மத்தபடி அவ்ளோ பெரிய கூட்டத்துக்கு முன்னாடி பர்ஃபார்ம் பண்ணினது ரொம்ப பெரிய அனுபவத்தைக் கொடுத்துச்சு!” என்றவரிடம் ` `திண்டுக்கல்லு திண்டுக்கல்லு” பாடல் பாடும்போது திண்டுக்கல் சீனிவாசன் அந்தப் பாடலை என்ஜாய் பண்ணின வீடியோ சமூகவலைதள பக்கங்களில் வைரலாச்சே.. அதைப் பார்த்தீங்களா?’னு கேட்டோம்.

நான் இன்னும் அந்த வீடியோ பார்க்கல. ஆனா, கேள்விப்பட்டேன். அவங்க எல்லாரும் மேடையில் இருந்து ரொம்ப தூரமா உட்கார்ந்திருந்தாங்க. நான் சின்னப்புள்ளையா இருந்தப்பவே திண்டுக்கல் சீனிவாசன் ஐயாவைத் தெரியும். நம்ம வீட்டுப் பொண்ணுன்னு தான் என்னை அவர் ட்ரீட் பண்ணுவார். இந்தப் பாட்டை பாடுறதுக்கு முன்னாடி என் ஊர்னு சொல்லியும், சீனிவாசன் ஐயாவை சொல்லியும் லீடு கொடுத்துட்டு தான் பாடினேன். ஐயா அந்தப் பாட்டை என்ஜாய் பண்ணி ரசிச்சிருக்காங்கங்கிறது உண்மையாவே சந்தோஷமா இருக்கு. அது செம வைப் ஆன பாட்டு!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

விஜயபாஸ்கர் சார் தான் எங்களை வழிநடத்திட்டு இருந்தார். அவர் நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘டைம் தான் கொடுக்க முடியல.. அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு உங்களுடைய பர்ஃபார்மென்ஸ் ரொம்ப நிறைவா இருந்ததுன்னு’ சொன்னார். எல்லா கட்சிகளிலும் கலந்துட்டு இருந்திருக்கோம். எங்க நிகழ்ச்சி 12 மணிக்குள்ள முடிஞ்சிடும்னு சொன்னாங்க. அதே மாதிரி சொன்ன டைமுக்கு முடிச்சு எங்களை அனுப்பி வச்சிட்டாங்க.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: