Corona in india
இந்தியாவில் நேற்று 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,112 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806ஆக உள்ளது.
இது மட்டுமல்லாது 29 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 329ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 1,515 பேருக்கும், மகராஷ்டிராவில் 850 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
+ There are no comments
Add yours