அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது, நீண்ட காலமாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூனில் தடை விதிக்கப்பட்டது.
இத்தடைக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் பைடன், “பெண்களின் உடல்நலம் மீதான அரசியல் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.