கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன் (40) – தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (4) என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடுப்பச்சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும் மீண்டும் தம்பதி இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தெய்வா, இரண்டு 2 குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.