400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ‘நிங்கலோ’ சூரிய கிரகணம் நாளை (ஏப்.20) நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தின்போது வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் காண முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த கிரகணம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மட்டுமே 62 வினாடிகளுக்கு தெரியும் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.34 முதல் 6.32 இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது. இருப்பினும் வானிலை ஆராய்ச்சி மையம் ஒளிபரப்பும் நேரலையில் பார்க்கலாம்.
+ There are no comments
Add yours