சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கதவை உடைத்து முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கைவரிசை.. வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு…

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பவளத்தானூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் திருவிழா நிறைவு பெற்றது.

இதை அடுத்து நேற்று இரவு முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்துக் கொண்டு,கோவிலின் உள்ளே சென்று தங்களது கைவரிசையை காட்டி திருடச் சென்றனர். அப்போது கோவிலின் உள் பிரகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை அலாரம் பெருத்த சப்தத்தை எழுப்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.இந்த வீடியோ காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊர் பொதுமக்களின் சார்பில் இந்த திருட்டு சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை ஆய்வாளர் தொல்காப்பியின் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: