Shocking Actress Malavika Avinash Hospitalized Due To Severe Migraine Issue | எச்சரிக்கை! இதை சாதரணமாக எடுக்காதீர்கள்… மருத்துவமனையில் கேஜிஎஃப் பட நடிகை

Estimated read time 1 min read

Malavika Avinash Hospitalized: மாதவனின் ‘ஜே ஜே’ படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், மாளவிகா அவினாஷ். தற்போதைய தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்றால், கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும், கதை சொல்லியிடம் கதை கேட்கும் நெறியாளராக நடித்தவர் எனலாம். 

இவர், 1988இல் கன்னடத்தில் அறிமுகமானாலும், தமிழில் 2003ஆம் ஆண்டுதான் அறிமுகமானார். அதற்கு முன்னர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ஆதி, பைரவா, கைதி என பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், இவர் தமிழ் சின்னதிரை ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் எனலாம். 

சின்னதிரை தொடர்களான அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜ ராஜேஸ்வரி, அரசி என தொடங்கி காற்றுக்கென்ன வேலி, கண்ணெதிரே தோன்றினால் என தற்போது தமிழில் முகம் காட்டி வருகிறார். 

மேலும் படிக்க | அடங்கேப்பா… ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

இந்நிலையில், நடிகையும், அரசியல்வாதியுமான மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் தனது உடல்நலப் பிரச்சனை குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

அவர் அந்த பதிவில்,”உங்களுக்கு ஒற்றை தலைவலி (Migrane) பிரச்னை ஏற்படும் போது  அதனை அலட்சியப்படுத்த வேண்டாம்” என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். மாளவிகா, ஒற்றை தலைவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது. சாதரண தலைவலி என்று நினைத்துக் கொண்டால் அவரைப் போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதுதான் என்று சிறு எச்சரிக்கையும் கொடுத்தார்.

மருத்துவமனை படுக்கையில் இருந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாளவிகா, குணமடைந்து வருவது குறித்தும் பகிர்ந்தார். போட்டோவில் இருப்பவர் உண்மையிலேயே இவரா என்று சந்தேகப்படும் அளவுக்கு மாளவிகாவின் முகம் மாறிவிட்டது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாளவிகா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | லியோ பட நடிகரின் புதிய படம்… கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours