அனுபமா பரமேஸ்வரன் எங்கள் படத்தில் இருந்து விலகவில்லை ; ஹீரோ காட்டம்

14 ஏப், 2023 – 14:43 IST

எழுத்தின் அளவு:


Anupama-parameswaran-not-out-from-movie-says-actor-siddhu

தெலுங்கில் கடந்த வருடம் வெளியான டிஜே தில்லு என்கிற படம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய லாபம் சம்பாதித்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் இந்த படத்திற்கான கதையையும் எழுதி இருந்தால் படத்தின் ஹீரோ சித்து ஜோர்னலகடா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தில்லு ஸ்கொயர் என தற்காலிக டைட்டில் வைத்து படம் ஒன்று தயாராகி வருகிறது. இதிலும் கதாநாயகராக சித்து ஜோர்னலகடா தான் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் கதாநாயகியாக மேகா ஷெட்டி நடித்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேசமயம் இந்த படத்தில் இருந்து அனுபமா விலகி விட்டார் என்றும் ஸ்ரீ லீலா நடிக்கிறார் என்றும், அதன் பிறகு அவரும் மாறிவிட்டார் என்றும் சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் படத்தின் ஹீரோ சிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது இந்த படத்தின் டீசரை முதலில் நாங்கள் வெளியிட்டபோது இந்த படத்தின் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்று அறிவித்தோம். இப்போது வரை அவருடன் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் சில மீடியாக்களில் இப்படி கதாநாயகிகள் மாறிவிட்டார்கள் என தவறான தகவல்களை கொடுக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, பேசாமல் இந்த படத்தின் ஹீரோவாக நானே படப்பிடிப்பில் எனக்கு நானே விவாதம் செய்து சண்டையிட்டுக்கொண்டு செட்டை விட்டு வெளியேறினார் என்று ஒரு செய்தியை ட்வீட் போட்டால் என்ன என்று எண்ணும் அளவிற்கு இந்த வதந்திகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

ஆனால் திரையுலகை சேர்ந்த பலரும், இது ஒரு பெரிய விஷயமே இல்லை.. எப்படியோ இவரது படம் மீடியா வெளிச்சத்தில் இருந்துகொண்டு தானே இருக்கிறது என சந்தோஷப்படுவதற்கு பதிலாக ஏன் இப்படி டென்ஷன் ஆகிறார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: