டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்ததுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவு புதிய உச்சமான 78.29ஐ தொட்டுள்ளது.
இதே போல் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் வரை சரிவடைந்து 52,881 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 413 புள்ளிகள் சரிவடைந்து 15,800 புள்ளிகளாக காணப்பட்டது. வார தொடக்கத்தின் முதல் நாளிலேயே பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-Prabhanjani Saravanan
+ There are no comments
Add yours