13 ரன்கள் முன்னிலையில் இந்தியா அணி:5-விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தல்.

Estimated read time 1 min read

கேப்டவுன்:

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் கேப்டன் டீன் எல்கரின் (3 ரன்) விக்கெட்டை பறிகொடுத்து 17 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் (8 ரன்), கேஷவ் மகராஜ் (6 ரன்) களத்தில்  இருந்தனர்.

இன்று 2- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  தென் ஆப்பிரிக்க அணியில் பீட்டர்சென் (72 ரன்கள்) தவிர ஏனைய வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதையடுத்து   13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீரரான ராகுல் 22 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மயங்க் அகர்வால் 15 பந்துகளில் 7 ரன்களை எடுத்து அவரும் ஆட்டம் இழந்தார் தற்போது களத்தில் கேப்டன் கோலி மற்றும் புஜாரா விளையாடி வருகின்றனர். 17 ஓவர் முடிவில் 57 ரன்கள் குவித்து 2 விக்கெட்களை இழந்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours