டெல்லி:
கேரளாவை சேர்ந்த சோம்நாத் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் இருந்து வந்தார்.
தற்போது சிவனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இஸ்ரோவுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதாவது கேரளாவை சேர்ந்த சோம்நாத் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் தலைவர்
சோம்நாத் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருப்பார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கேரளாவை சேர்ந்த சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக பதவியில் இருந்து வந்தவர் ஆவார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சோம்நாத் 1963-ல் பிறந்தார்.
யார் இவர்?
கேரளப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், மேலும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். இந்திய விண்வெளி பொறியாளரும், ராக்கெட் விஞ்ஞானியுமான டாக்டர்.எஸ்.சோமநாத் ஏவுகணை வாகன வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணராக உள்ளார்.
நிபுணத்துவம் பெற்றவர்
லான்ச் வாகன அமைப்பு பொறியியல், கட்டமைப்பு வடிவமைப்பு, கட்டமைப்பு இயக்கவியல், ஒருங்கிணைப்பு வடிவமைப்புகள் மற்றும் நடைமுறைகள், பொறிமுறை வடிவமைப்பு மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். தனது விண்வெளி தொழில் ஆரம்ப கட்டத்தில் லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி) ஒருங்கிணைப்புக்கான குழு தலைவராக இருந்தவர்
பல்வேறு விருதுகள்
தனது சிறந்த செயல் திறனுக்காக இந்திய விண்வெளி சங்கத்தின் (ASI), ‘செயல்திறன் சிறப்பு விருது மற்றும் டீம் எக்ஸலன்ஸ் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் இஸ்ரோ தலைவரின் பதவிக்காலம்நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours