சேமிப்பு பணத்தில் இலவச மாஸ்க் சிறுவனுக்கு குவியும் பாராட்டு.

Estimated read time 1 min read

இராமநாதபுரம்:

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 12 வயது சிறுவன் தனது சேமிப்பு பணத்தில் பொதுமக்களுக்கு  இலவசமாக  முககவசம் வழங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில்  எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செய்யது கனி, ஆட்டோ ஓட்டுநரான உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் இளைய மகன் அப்துல் கலாம்,(12) பரமக்குடியில் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்  ஒரு வருடமாக தனது தந்தை தரும் காசுகளை உண்டியலில் போட்டு ரூ 2500 சேமித்து வைத்து உள்ளார்.

சேமித்த பணத்தில்  முககவசங்களை வாங்கி பரமக்குடி பேருந்து நிலையத்தில்  பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய ஆட்டோ ஓட்டுனரின் 12 வயது மகன் தனது சேமிப்பு பணத்தில் இலவசமாக முககவசம் வழங்கிய இச்சிறுவனை பலரும்  பாராட்டி வருகின்றனர்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours