சேலம்:

சேலம்  மாவட்டம் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர்பரமசிவம்.

இவர் சேலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் செல்ல தாரமங்கலம் பணிமனை தொ.மு.ச. செயலாளரும், நடத்துனருமான குணசேகரன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக ஓட்டுனர் பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நரேந்திரனின் ஆலோசனையின்படி,பரமசிவம், லஞ்சப் பணம் ரூ.5  ஆயிரத்தை குணசேகரனிடம் வழங்கினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பிடியில் குணசேகரன்..

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக குணசேகரனை கைது செய்தனர்.இதுதொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– வால்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *