கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம் எனவும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை தர பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours