சென்னை பல்கலைகழகம் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.

Estimated read time 1 min read

சென்னை:

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21-ம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மேலும் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பதை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் இன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள் நடத்த அனுமதி உண்டு எனவும் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி ஒப்புதல் அளிக்கும் எனவும் அரசு கூறியுள்ளது. இதனிடையே சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாத 5 திருமண மண்டபங்களை ரூ.13,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours