சேலம்:

ஊரடங்கு உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி எச்சரித்த காவல்துறையினர்

கொரோனா மற்றும் ஒமிக்கிறான் தொற்று தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது மேலும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது இன்று தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,ஐந்து ரோடு,புதிய பேருந்து நிலையம், ஜங்சன்,ஏற்காடு பிரதான சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் மாநகரின் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் அத்தியாவசியம் இன்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் மேலும் மாநகரில் உள்ள மேம்பாலங்கள் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங்கின இருந்தபோதிலும் மக்கள் எவரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது சேலம் மாநகரில் 800 காவலர்களும் மாவட்டத்தில் 1,200 காவலர்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *