சேலம்:
இந்தியா முழுவதும் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு தொழில்களில் இயல்பு வாழ்க்கையினால் பாதிப்பு ஏற்பட்டது.இந்த நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.அனைத்து அரசுப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.இன்று எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் தங்களது ஆவணங்களை கொண்டு வந்து தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனர்.
+ There are no comments
Add yours