சேலம்:
தமிழகத்தில் விவசாய பெருமக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இந்த நிலையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நவீன தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை தென்னை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.சேலம் சங்ககிரி அடுத்த காவேரிப்பட்டி பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் அதிகாரிகள் தலைமையில் தேங்காய் பறிக்கும் நவீன கருவி செயல் முறை பயிற்சி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் பொறியாளர் செல்வம் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கங்களையும்,செயல் முறைகளையும் செய்து காட்டினர். மேலும் இந்த திட்டமானது நடப்பு 2020 – 21 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயலாக்கம் செய்யப்பட்டு,விவசாயிகளுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கருவியை அரசு அறிவிப்பு செய்துள்ளது.தேவை உள்ள விவசாயிகள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து தரும் என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
+ There are no comments
Add yours