தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 12 வது நாளாக தேடி வருகிறது.கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது ராஜேந்திரபாலாஜி தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், ஓசூர் ஆகிய பகுதியில் பதுங்கி உள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேந்திரபலாஜியை தொடர்பு கொண்டு உதவி செய்ததாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூர் அடுத்த அக்கரகாரம் பகுதியைs சேர்ந்த அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜேந்திர பாலாஜியை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours