தனியார் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ்களை முத்திரை இல்லாமல் வழங்கபடுகிறது – பெற்றோர்கள் அதிர்ச்சி!.,

Estimated read time 0 min read

சேலம் அருகே தனியார் பள்ளியில் போலி சான்றிதழ் வழங்கி வருவதாக டிசம்பர் 21. ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே. கே. நகர் பகுதியில் இயங்கி வரும் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளியின் முத்திரை இல்லாமல் மேற்படிப்புக்கு செல்லத்தகாத வகையில் போலி சான்றிதழ் வழங்கி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Letter to collector

மேலும், கொரோனா காலகட்டத்தில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களில் இருந்து குறைத்து வசூல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் இப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வது மட்டுமில்லாமல் கொரோனா பெரும் தொற்று காலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களிடம் சுமார் 80 ஆயிரம் வரை பணம் வசூல் செய்துள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் சில பெற்றோர்கள் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரிகள் என பலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் புகார் அளித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்கும் படிப்பு சான்றிதழ்களில் பள்ளியின் முத்திரை பதிவு செய்யாமல் சான்றிதழ் மேற்படிப்புக்கு செல்லத்தக்க வகையில் வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து மாநில மேல்நிலை பள்ளித் தேர்வுகள் குழுமம், தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை செய்து பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு முறையான சான்றிதழ்
வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours